
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்றையதினம் தீயில் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளது.





இதன்போது வீட்டில் இருந்த 2 அலுமாரிகள், 5 கதிரைகள், ஒரு தொலைக்காட்சி பெட்டி, ஒரு துவிச்சக்கர வண்டி, ஒரு மேசை, உடைகள், ஒலிபெருக்கி சாதனங்கள், ஒன்றரை பவுண் தங்க ஆபரணங்கள், ஒரு தொகை பணம் உள்ளிட்ட வீட்டு தளபாடங்கள் என்பன இதன்போது தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் அவரது மனைவி சமையலை முடித்துவிட்டு, அருகில் உள்ள கணவனின் தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.
எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என அறியமுடியவில்லை. இச் சம்பவத்தில் கிஷ்ணபிள்ளை ததீஸ்வரன் என்பவரது வீடே இவ்வாறு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இச்ச குறித்த விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்