
நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும்பாபிசேகம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.


ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து விநாயக பெருமான் வீதி வலம் வந்தார்.
அதனை தொடர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்வு இடம்பெற்று, பிரதான கும்பங்கள் வீதி வலம் வந்து பஞ்சதள இராஜகோபுர மகா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெற்றது.
இவ்கும்பாபிஷேக பெருவிழாவில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.