
வி.பி.பவுண்டேசன் நிறுவனத்தினால் மாணவர்களுக்கான வங்கி கணக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மாணவர்களுக்கான வங்கி கணக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு விசுவமடுவில் அமைந்துள்ள பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கலந்து கொண்டதுடன்,
வி.பி பவுன்டேசன் ஸ்தாபகர், இலங்கை வங்கியின் வடமாகான கணக்காய்வாளர் வாசுகி, இலங்கை வங்கி விசுவமடு கிளை முகாமையாளர், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



