
தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின் மஞ்சத் திருவிழா உற்சவம் இன்று (23) வெகு சிறப்பாக இடம்பெற்றது.







வருடாந்த மகோற்சவத்தின் 6ம் திருவிழாவான இன்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பான கொடித்தம்ப பூஜையை தொடர்ந்து, மாலை 5.00 மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது.
வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து அம்பாள், பிள்ளையார், முருகன், சண்டேஸ்வரி சமேதராக உள்வீதி ஊடாக வலம் வந்து மஞ்சத்திலே எழுந்தருளினார்.
ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் திருமஞ்சத் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.