
யாழ்ப்பாணம் கரவெட்டி துன்னாலை தெற்கு அ.த.க.பாடசாலை மீள் புனரமைக்கப்பட்டு 21/08/2023 பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.







இன்று காலை 11:45 மணியளவில் அர்ம்பமான நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து பாண்ட் இசையுடன் அழைத்து வரப்பட்டு கல்வெட்டு திரை நீக்கம் செய்யப்பட்டது.
கல்வெட்டு திரை நீக்கத்தினை 52 வது தளபதி மேஜர் ஜெனரல் y.a.b.m yahanpath. திரை நீக்கம் செய்து வைத்தார்.
Vanni aid canada நிதி அனுசரணையில் 4 வது சிங்க படையணியின் மேஜர் பணங்கம தலமையிலான ஆளணியினரால் குறித்த பாடாசாலை மீள் புனரமைக்கப்பட்டே இன்று கையளிக்கப்பட்டது.
இதில் 52 வது கட்டளைப்பணியக தளபதி மேஜர் ஜெனரல் y.a.b.m yahanpath, 4 வது சிங்க படையணியின் மேஜர் பணங்கம, மற்றும் இராணுவ அதிகாரிகள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றேர்கள், கரவெட்டி பிரதேச செயலக உதவி பிரதேச செயலர், வன்னி எயிட் கனடா பிரதிநிதிகள், உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.