
நாட்டில் அதிக வெப்ப நிலையுடனான வறட்சியான காலநிலை நிலவும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பழ வியாபாரிகள், இளநீர் வியாபாரிகள் விலை உயர்வின் காரணமாக வியாபாரம் இடம் பெறவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்கள்.


குறிப்பாக வெப்ப காலத்தில் பொதுமக்கள் பழம் வாங்க வருவார்கள். தற்பொழுது பழங்களின் விலையினை கேட்டு விட்டு சென்று விடுகின்றார்கள்.
ஏனென்றால் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எமது வியாபாரம் மற்றும் முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது என கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக யாழ்ப்பாண குடா நாட்டில் வெப்ப காலத்தில் பழங்கள், இளநீர் வியாபாரம் அதிகளவில் இடம்பெறும். எனினும் தற்போது பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பழங்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பழம், இளநீர் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.