
தியாகி பொன்.சிவகுமார் அவர்களின் 73 பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 10.30 மணியளவில் உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
பொன். சிவகுமார் நினைவேந்தல் ஏற்பாட்டு குழு உறுப்பினர் எஸ்.செந்தூரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அன்னாரின் சகோதரி சிவகுமாரி மற்றும் நல்லூர் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் இ.ஜெயகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





