
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் கல்விச் சுற்றுலா மற்றும் திருத்தல யாத்திரைக்கான நிதி உதவியாக ரூபா 100,000 நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடம், சைவசித்தாந்தத்துறை மாணவர்களின் கல்விச்சுற்றுலா, மற்றும் திருத்தல யாத்திரைக்காகவே குறித்த நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந் நன்கொடையினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் ஆச்சிரமத்தில் வைத்து பிரதிநிதிகளிடம் வழங்கினார்.