
சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள செருக்கல்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று (29) வெகு சிறப்பாக இடம்பெற்றது.
காலை 6 மணிக்கு வசந்த மண்டப பூஜைகள் ஆரம்பமாகி, காலை 9 மணிக்கு விநாயகர் சித்திரத் தேரில் ஆரோகணித்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ தேரோட்டம் இடம்பெற்றது.
இதன்போது பக்தர்கள் கற்பூரச்சட்டி மற்றும் அங்கப்பிரதஷ்சணை செய்து நேர்த்திக்கடனங்களையும் நிறைவேற்றினார்கள்.



