
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் கணவனால் மனைவி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இன்று காலை இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கணவனும் மனைவியும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இது தொடர்பாக பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் பருத்தித்துறை பொலீசாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் அவர்களது தாயார் வீடுகளில் வசித்துவந்துள்ள நிலையில் இன்றைய தினம் திடீரென கணவரும் அவரது சகாக்கள் சகிதம் வாள் கொண்டு சென்று வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி தனது மனைவி அவளது விருப்பமின்றி கார் ஒன்றில் ஏற்றிச் சென்றுள்ளதாக பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் அப்பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.