
வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் சுமார் 60 ஆசிரியர்களும் கிழக்கு மாகாணத்தில் சுமார் 187 ஆசிரியர்களும் நீண்டகாலமாக நிரந்தர நியமனம் இன்றி தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
குறித்த தொண்டர் ஆசிரியர்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமக்கான நிரந்தர நியமத்தை பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.
அதுதொடர்பாக ஆராயந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த திங்கட் கிழமை இடம்பெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபித்ததுடன் நிரந்தர நியமனங்கள் வழக்கப்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்திய நிலையில், அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.