
சுற்றாடல் அதிகார சபை, கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, கொமேர்சல் வங்கி, பூநகரி பிரதேச சபை ஆகியன இணைந்து குறித்த பணியை இன்று முன்னெடுத்தனர்.
குறித்த நிகழ்வு பூநகரி சங்குப்பிட்டி பாலமருகில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் மகேஸ் ஜல்தோட்ட, கிளிநொச்சி மாவட்ட கடல்
சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் கடல்சூழல் அதிகாரி எம். கேசவன், கொமேர்சல் வங்கி பிராந்திய முகாமையாளர் சிவஞானம், பூநகரி பிரதேச சபையினர், அரச நிறுவன மற்றும் வங்கி ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது, உக்கும், உக்காத பொருட்கள் வேறுபடுத்தி துப்பரவு செய்யப்பட்டது.




