
மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சர்வதேசமே எமக்கு நீதிவேண்டும் என கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம் கல்லடி பலாலத்தில் ஆரம்பித்து காந்தி பூங்காவரை இன்று புதன்கிழமை (30) காலையில் இடம்பெற்றது.
இன்று 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தையிட்டு மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியின் ஏற்பாட்டில் இந்த நீதிகோரி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையடுத்து கல்லடி பாலத்தில் இன்று காலை 10 மணிக்கு காணால் ஆக்கப்பட்ட வர்களின் உறவுகள் மற்றும் இன்னால் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மதகுருமார்கள் கடத்தப்பட்டு காணால் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரதீப் எக்கினா கொடவின் துனைவியார் சந்தியா, சரூக செயற்பாட்டாளர்கள் என நூற்றுக்கணக்கானேர் ஒன்று திரண்டு தமது உறவுகளின் புகைக்கடங்களை கையில் ஏந்தியவாறு எங்கே எங்கே உறவுகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்,
எமது உறவுகள் எமக்கு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, சர்வதேச விசாரணைவேண்டும், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் ஓ.எம்.பி வேண்டாம், நஷ்டஈடு எமக்கு வேண்டாம், சாட்சியங்களை அழிக்காதே, ஆட்கடத்தலை நிறுத்து, உள்ளக விசாரணை வேண்டாம்,
தமிழர்கள் நாம் என்ன அநாதைகளா, காலம்கடந்தும் நாம் தவிப்பது ஏன், போன்ற சுலேகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு கல்லடி பாலத்தில் இருந்து ஆர்ப்பாட ஊர்வலம் ஆரம்பித்து அரசடி சந்தி சென்று அங்கிருந்து மட்டு தலைமையகு பொலிஸ் நிலைய சுற்றுவட்த்தை சென்று காந்தி பூங்காவை சென்றடைந்தது.
இதனை தொடர்ந்து காந்தி பூங்காலில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கான தூபியில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் நீதிகோரிய பிரகடணம் காணாமல் ஆக்கப்பட்டோரின் வாசிக்கப்பட்ட பின்னர் ஆர்பாட்ட காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.