
இராணுவத்தினரல் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, நேற்று (30) காலை தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைகாடு பகுதியில், கண்டிப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக, கிளிநொச்சி – கட்டைக்காடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றதையடுத்து பொலிசாரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது அவர் உடமையில் வைத்திருந்த 950 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன், அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடரபாக தருமபுரம் பொலிசார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், சந்தேகநபரை நாளையதினம் (01.09.2023) கிளிநொச்சி மவட்ட நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.