நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொருளாதார விலையேற்றத்தினாலும் நாளாந்தம் கூலி வேலைசெய்யும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
அன்றாட உணவுக்காக பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றார்கள்.
இன்னிலையில் வவுனியா 4ஆம் ஒழுங்கை உக்கிளாங்குளத்தினை சேர்ந்த சிவலிங்கம் ரகீஷன் அவர்களின் நிதி உதவியில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,மாற்றுத்திறனாளிகள் என 75 குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரத்தி ஜநூறு ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மாதர் அமைப்பின் ஊடாககொக்குளாய்,கொக்குத்தொடுவாய்,முள்ளியவளை,தண்ணீரூற்று,சிலாவத்தை போன்ற பகுதிகளில் வசித்துவரும் 75 மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு பொதிகள் நேற்று 18.09.21 அன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.