
இராணுவத்தினரால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 11 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
கிளிநொச்சி கல்மாடுநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கான கட்டளை தளபதி சுஜிவ கெட்டியாரச்சி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள், கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன், கண்டவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியச்சகர் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு தென்னங்கன்றுகளும், பழமரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.



