கச்சதீவு இலங்கையிடம் இருக்கிறதா அல்லது இந்தியாவிற்கு கொடுப்பதா என இவைகள் சம்பந்தமாக அந்த இரண்டு நாடுகளும் தெளிவாக ஆராய வேண்டும் என தமிழீழ விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவரும் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (03) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்பேது, ஊடகவியலாளர் ஒருவர் “தமிழ்நாட்டு மீன்வள அமைச்சர் கச்சதீவை மீட்கவேண்டும் என கூறியுள்ளார். இது குறித்து தங்களது நிலைப்பாடு என்ன?” என வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆரம்ப காலங்களில் இந்தியா வைத்திருந்ததாக பின்னர் இலங்கைக்கு கொடுக்கப்பட்டதாகவும் பல உண்மைகளும் கதைகளும் பேசப்பட்டுக்கொண்டு கொண்டிருக்கின்றன.
இது ஒவ்வொரு தடவையும் இலங்கை இந்தியாவிற்கு கொடுப்பதும், இந்தியா இலங்கைக்கு கொடுப்பதுமாக இல்லாமல் ஒரு நிரந்தரமான சரியான முடிவு எடுக்கப்பட்டு செய்யப்பட வேண்டும் என்பது தான் எனது நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.