
ஊர்காவற்துறைப் பிரதேச சபைச் செயலாளரைக் கைது செய்யுமாறு நூற்றுக்குக்கும் கூடுதலான அப் பிரதேச சபை வாக்காளர் கையெழுத்திட்டு ஊர்காவற்துறைக் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீதி ஒன்றுக்கு செபத்தியான் கண்ணகி தெரு என பெயரிட்டமை குறித்து நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழிலும் சிங்களத்திலும் கொடுத்த முறையீட்டில், தமிழருக்கும் புனிதமானவள், சிங்களவருக்கும் புனிதமானவள், கண்ணகி என்ற பத்தினி.
பிரான்சில் பிறந்த செபத்தியானுக்கும் கண்ணகிக்கும் என்ன தொடர்பு?
கண்ணகிக்குக் களங்கம் தருகின்ற செபத்தியான் கண்ணகி தெரு என்ற பெயர்ப்பலகையை உடனே அகற்றுக.
இன மத முரண்களை மோதல்களை உருவாக்கிய பிரதேச சபைச் செயலாளரைக் கைது செய்க எனச் சட்டங்களை மேற்கோள்காட்டி வாக்காளர் முறையிட்டுள்ளனர்.
தாம் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் பிரதேச சபைச் செயலாளர் நேற்றைய 5.9.2023 விசாரணைக்குக் காவல் நிலையம் வரவில்லை – என குறிப்பிடப்பட்டுள்ளது.



