யாழில், வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில், பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நேற்று திருநெல்வேலி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும், மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர் என தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.