
யாழ்ப்பாணம் – பலாலி கிழக்கு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை பகல் வேளையில் குளவி கூட்டில் இருந்து கலைந்த குளவிகளால் குறித்த சம்பவம் இடம்பெற்றது.
காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.