
இலங்கையின் தெய்வேந்திர முனையிலிருந்து கடந்த 29/08/2023 ஆரம்பித்த நடை பயணம் இன்றைய தினம் பருத்தித்துறை முனை அமைந்துள்ள சக்கோட்டை முனையில் நிறைவடைந்துள்ளது.
தெய்வேந்திர முனையிலிருந்து 600 மீற்றர் தொலைவு தூரத்தை இன்று 12 வது நாள் நிறைவு செய்துள்ளார் எஸ் பி விக்கிரமசிங்க. சப்புரமுவக மாகாணம் ரம்புக்கணையை பிறப்பிடமாக கொண்டவரே எஸ் பி விக்கிரமசிங்க, அவர் தனது 58 வது வயதிலேயே இலங்கையில் சாதனை புரிவதற்க்காக இந்த நடை பயணத்தை மேற்கொண்டிருந்தார்.





