
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இன்று மாலை 04.30 மணியளவில் ஆசிரியை ஒருவரின் தங்கிச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியை பேருந்திற்காக காத்திருந்தவேளை உந்துருளியில் வந்த இருவரால் ஆசிரியையின் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது

இந்நிலையில் இது தொடர்பாக மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட நிலையில் உடனடியாக அவ்விடம் சென்ற மருதங்க்கேணி போலீஸார் மேலதிகாரி விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.