யாழ்.சிறைச்சாலையில் 39 போிடம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
கடந்த 16ம் திகதி சிறைச்சாலையில் உள்ள 39 போிடம் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று பரிசோதிக்கப்பட்ட நிலையில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் 22 வயதான இளம் பெண்ணும் அடங்கியிருக்கின்றார். இந்நிலையில் யாழ்.சிறைச்சாலையில் ஒரு கொரோனா கொத்தணி உருவாகுமா என கேள்வி எழுந்துள்ளது