பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை இடைநிறுத்த வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் சர்வதேச தரத்திற்கு அமைய பின்பற்றும்வரை அதனை பயன்படுத்துவதை இடைநிறுத்தி வைக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல், பலவந்தமாக காணாமல் செய்யப்பட்ட பல சம்பவங்களிற்கு தீர்வை காணவும் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 54 அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை குறித்த அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.

அமைதியான ஒன்றுகூடல் உரிமையை உறுதி செய்யாவும் அவர்களுக்கு எதிராக பலத்தை பிரயோகிப்பதை தவிர்க்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

பொறுப்புக்கூறல் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலை நிறுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews