முப்பது மூன்று வருடங்களாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் வல்லிபுர ஆழ்வரே தஞ்சம் என வாழ்ந்துவந்த முதியவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று இடம் பெற்றிள்ளது.
இது குறித்த மேலும் தெரியவருவதாவது
1990 ஆம் ஆண்டு இடம் பெற்ற வலிகாமம் இடப்பெயர்வின்போது செல் தாக்குதலில் காலொன்றை இழந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறிய நிலையில் தான் உறவினர்களுடன் செல்ல விரும்பாது வடமராட்சி வல்லிபுர ஆழ்வர் காலடியில் தொண்டு செய்து தனது காலத்தை கடந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நாளை ஆலய திருவிழா இடம் பெறவுள்ள நிலையில் சுகாதாரப் பகுதியினரின் உதவியுடன் அவரை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சிகள் இடம் பெற்று வந்தன.
குறித்த முதியவர் வல்லிபுர ஆழ்வாரை விட்டு தன்னால் அங்கிருந்து வெளியேற முடியாது என மறுத்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற தும்பளை திடீர் மரண விசாரணை அதிகாரி அஞ்சலா வின்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் இடம் பெற்ற உடற் கூற்று பரிசோதனையில் மாரடைப்பால் மரணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டியபுலம் வசாவிளானைச் சேர்ந்த முருகன் தியாகு (வயது- 76) என்ற வயோதிபரே இவ்வாறு உயிரழந்துள்ளார்.உயிரழந்தவரது சடலத்தை வசாவிளானினில் உள்ள உறவினர்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலிருந்து பொறுப்பேற்று சென்றுள்ளனர்.