
நல்லூர் உற்சவ காலத்தில் கடமை ஆற்றிய பொலிசார் மற்றும் சாரணங்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு ,நேற்று நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலய வருடாங்க மகோற்சவம் கடந்த 21 ம் திகதியிலிருந்து ஆரம்பமாகி நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் உற்சவ காலங்களில் பாதுகாப்பு கடமை மற்றும் வீதி தடைகளில் கடமையாற்றி, பக்தர்கள் கந்தனை வழிபடுவதற்கு ஒத்துழைத்த பொலிசார் மற்றும் சாரணர்களை இவ்வாறு மதிப்பளிக்கப்பட்டனர்.
இதில் நேற்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று காளாஞ்சியும் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர், யாழ்ப்பாணமாவட்ட சாரண சங்கத் தலைவர் பொலிஸ் உயரதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.