தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் மீது நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்திய அமைதி காக்கும் படையினர் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்டெம்பர் 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் எனப்படும் இராசையா பார்த்தீபனின் நினைவாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் வாகனப் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை அம்பாறை பொத்துவிலிலிருந்து ஆரம்பமான பேரணி, மட்டக்களப்பு ஊடாக மூதூர் கடந்து திருகோணமலை நோக்கி பயணித்தபோது சர்தாபுர பகுதியில் ஒரு குழுவினர் அவர்களுக்கு தடையை ஏற்படுத்தியிருந்தனர்.திலீபனின் உருவம் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்திய வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய அந்த குழுவினர் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் தாக்குதல் நடத்தினர்.
Previous Article
சனல் நாலு யாருக்கு நன்மை செய்கின்றது? – ஆய்வாளர் நிலாந்தன்