திலீபனின் நினைவேந்தலை தடை செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபனின் 36வது ஆண்டு நினைவு தினத்தின் 6 ஆம் நாள் நிகழ்வு இன்று காலை நினைவுகூரப்பட்டது.

நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில் தொடர்சியான நினைவேந்தல் ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு இடம்பெற்று வரும் நிலையில் இன்று காலை மாவீரர் ஒருவரின் தாயார் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார்.

நினைவுத் தூபிக்கு அருகில் அடையாள உண்ணாவிரதம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

குறித்த பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர், புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை தியாகி திலீபனின் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பணம் பொலிஸார் தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

திலீபனின் நினைவேந்தலை தடைசெய்ய கோரி யாழ்ப்பாண பொலிஸார் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று, யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews