
நேற்றையதினம் காரைநகர் – ஊரி பகுதியில் 12 கிலோ 340 கிராம் எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சந்நேகநபர் ஒருவரே கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார். அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.