
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை ஜேர்மனிக்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேர்லின் உலகலாவிய விவாதத்தில் பங்கேற்பதற்காக இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் மாநாட்டில் உரையாற்றவும் உள்ளார்.
தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு உலகளாவிய தீர்வுகளைக் கண்டறிவதற்கான பெர்லின் உலகலாவிய விவாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.