
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம் நடைபெற்றது.


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் இன்று (27) நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


யாழ்ப்பாண மாவட்டத்தின் பொது உட்கட்டமைப்பு அபிவிருத்தி, அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மக்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சினைகள் என்பவை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.


யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் இக்கலந்துரையாடல் உறுதுணையாக அமைந்திருந்தது.