எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாடு எதிர்வரும் 24 ம் திகதி காலை 9:30 மணிக்கு இணைய வளியில் (Passcode: 313906
Webinar ID: 871 6508 3331
Passcode: 313906) இடம் பெறவுள்ளதாத தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் அறிவித்துள்ளது .இது தொடர்பாக அந் நிறுவனம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்
மதத் தலைவர்களே, ஐயா, அம்மனி !
இந்திய இழுவைமடி படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி
முறையினால் எமது மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பான தேசிய
கலந்துரையாடல்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமானது கடந்த 24 வருடங்களாக இலங்கை நாட்டில் வாழுகின்ற
மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக
குறிப்பாக சிறு மீனவர்களின் உரிமைகளுக்காக போராடி வருகின்ற ஒரு சிவில் அமைப்பாகும்.
அந்த வகையில் 30 வருட கால கொடூர யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரங்களை இழந்து பல துன்பங்களை அனுபவிக்கும் வடகிழக்கு மீனவர்கள் மற்றும்
அனைத்து மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பலவிதமான நடவடிக்கைகளை
முன்னெடுத்து வருகின்றது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்கள் இன்றும் பலவிதமான
பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக சட்டவிரோத மீன்பிடி முறை, வாழ்வாதார நிலைகள் அபிவிருத்தி செய்யப்படாமை, புலம்பெயர் மீனவர்களினால் எற்படும் பிரச்சினைகள், மீனவர்களின் நிலங்கள் இதுவரை விடுவிக்கப்படாமை போன்றவைகளாகும். இது
இவ்வாறிருக்க ஆயிரக்கணக்கான(1000-2000) இந்திய இழுவைமடி படகுகள் வட பகுதியின் கரையை
அண்டிய பிரதேசங்களுக்குள் புகுந்து மீனவ வளங்கள் மற்றும் மீனவர்களின் கோடிக்கணக்கான
சொத்துக்களை அழித்து வருகின்றமையானது வட பகுதி மீனவர்கள் முகம் கொடுக்கும் மிகப் பெரிய
பிரச்சினையாகும். கடந்த மாதம் முழுவதுமாக இப்பிரச்சினை வளர்ச்சியடைந்துள்ளதோடு
மீனவர்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிப்பதற்கான முயற்சிகளும் உருவாகின. கடந்த 20. வருடங்களாக தொடர்ந்து காணப்படுகின்ற இப்பிரச்சினைக்கு ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும்
நிலையான தீர்வு ஒன்றை வழங்கவில்லை. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் 2002ம்
ஆண்டிலிருந்து பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் அரசாஙகங்கள் கூடிய கவனத்தைச ்
செலுத்தவில்லை. தற்போது இப்பிரச்சினையானது வட பகுதி மீனவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை சமூக, பொருளாதார மற்றும் சுற்றாடல் ரீதியில் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இப் பிரச்சினையை தீர்ப்பதற்காக கடற்றொழில் அமைச்சர் மற்றும் அரசாங்கம் எந்தவிதமான சாதகமான முயற்சிகளையும் மேற்கொள்வது கிடையாது.
எனவே இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினரை தெளிவு படுத்தி இப்பிரச்சினையின் தன்மையை வெளிக்கொணர்ந்து நிலைத்திருக்கக்கூடிய தீர்வை எடுப்பதற்காக தேசிய கலநதரையாடல் ஒன்றை முனனெடுப்பதன் நோக்கத்துடன் இணையவழி கலந்தரையாடல்
ஒன்றை ஒழுங்கு செய்துள்ளோம்.
எனவே பொறுப்புமிக்க ஊடகவியலாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களாகிய நீங்கள் இந்த கலந்துரையாடலில் கலநதுக்கொண்டு இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கு
ஒத்துழைப்புகளை வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் என்றுள்ளது.