இலங்கை – யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளராக கடைமையாற்றும் டொக்டர் நித்தியப்பிரியா சிவராம் (BSMS, MD(S), 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். M.G.R மருத்துவப்பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட பட்டமேற்படிப்பு ((MD) குழந்தை மருத்துவத்றையில் கற்று பரீட்சையில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக பல்கலை அறிவிக்கப்பட்டுளளது.
இவர் தமிழ்நாடு டாக்டர். M.G.R மருத்துவப்பல்கலைக்கழகத்தில் 2020 ஆம் ஆண்டிலிந்து 2022 ஆம் ஆண்டு வரையுள்ள காலத்தில் 3 ஆண்டுகளிலும் நடைபெற்ற MD பரீட்சையில் அனைத்துப்பாடங்களிலும் அதிகூடிய புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற தகுதி பெற்றுள்ளமை குறிப்படத்தக்கது.
இதுவரை காலத்திலும் சித்தமருத்துவத்தில் குழந்தைமருத்துவத்றையில் இலங்கையையிலிருந்து சென்று பட்டமேற்படிப்பை முடித்து வந்த இரண்டாவது மருத்துவர் என்பதும், வரலாற்றில் இலங்கையையிலிருந்து சென்று தங்கப்பதக்கத்தைப் பெற்ற முதல் மருத்துவர் என்பதும் குறிப்பைடத்தக்கது.
அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இளநிலைப்பட்டப்படிப்பிலும் இறுதயாண்டில் முதல் தரத்தில் சித்தியெய்து முதலிடம் பெற்று பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருதுகளைப் பெற்றமை என்பதும் குறிப்படத்தக்கது.