யாழ்ப்பாணம் வடமராட்,சி சந்நிதியான் ஆச்சிரமத்தால் மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்துக்கு ரூபா 650,000 பெறுமதியான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொறித் தொகுதி ஒன்று பொருத்தப்பட்டு அது நேற்று பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த குடிநீர் பொறி தொகுதி பொருத்தப்பட்டு சம்பிர்தாய பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலமையில் இடம் பெற்றது.
இதனை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் திறந்துவைத்தார்.
இந் நிகழ்வில் தென்மராட்சி கல்வி வலய அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் – ஆரம்பக் கல்வி பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு 450 மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர்.
உடுவில் பிரதேச செயலக ஆளுகைக்கு உட்பட்ட இணுவில் கிழக்கு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 31 குடும்பங்களுக்கு 93,500 ரூபா பெறுமதியான
அத்தியவசியமான உணவுப் பொருள்களும் நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இணுவில் கிழக்கு – யா / 189 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள முருகேசு பொன்னம்மா ஞாபகர்த்த மண்டபத்தில் வைத்து உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. இதில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், பிரதேச கிராம சேவையாளர், சமூக செயற்பாட்டாளர் திரு.இ. தயாபரன், கிராம நிர்வாக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.