குமார் சங்கக்காரவுக்கு கிடைத்துள்ள உயர் பதவி!

மெரைல்போன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) உலக கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைமை அதிகாரியாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

2021 ஆம் ஆண்டு முதல் எம்சிசியின் தலைவராக இருந்த சங்கக்கார, உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக ஆறு ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் இங்கிலாந்து அணி தலைவரான மைக் கேட்டிங்கிற்குப் பதிலாக இப்போது பதவியேற்கவுள்ளார்.
மெரைல்போன் கிரிக்கெட் கழகம் கிரிக்கெட் போட்டிகளின் சட்டதிட்டங்களை தீர்மானிக்கும் அமைப்பாக இங்கிலாந்தின் பழைமையான ஒன்றாக காணப்பட்டு வருகின்றது.
இந்த கிரிக்கெட் அமைப்பின் தலைவராக கடந்த காலங்களில் செயற்பட்டு வந்த குமார் சங்கக்கார தற்போது குறிப்பிட்ட அமைப்பின் உலக கிரிக்கெட் கூட்டமைப்பினை தலைமை தாங்கவுள்ளார்.

மெரைல்போன் கிரிக்கெட் கழகத்தின் கிரிக்கெட் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களாக இந்தியாவின் முன்னாள் தலைவர் சௌராவ் கங்குலி, ஹீத்தர் நைட், ஜஸ்டின் லேங்கர், இயன் மோர்கன் மற்றும் தென்னாபிரிக்காவின் கிரேம் ஸ்மித் ஆகியோர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews