
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் இன்று (20) இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இயக்கச்சியில் ஏ9வீதி அருகே உள்ள பராமரிப்பு இல்லாத தனிநபர் ஒருவரின் காணியிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான காசிநாதர் கஜிதரன் என்வர் ஆவார்.இவர் கரந்தாய் பளையைச் சேர்ந்தவர் ஆவார்.

இன்று (20) 12.00மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டவரே இன்று மாலை 4.00மணியளவில் உறவினர்கள் தேடிச்சென்ற வேலையிலேயே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை பளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.