
மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் நினைவாக நேற்றையதினம் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.

கடந்த ஆனி மாதம் யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் பகுதியில், நேருக்கு நேர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில், இரண்டு மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளும் உயிரிழந்தனர்.

இதில் உயிரிழந்த அராலி மத்தி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெ.சறோஜன் என்பவரது 29வது பிறந்த தினம் நேற்றாகும் (2023.10.05).

இந்நிலையில் அவரது நினைவாக, அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த பகுதியில் வீதியோரத்தில் பயன்தரு, நிழல் தரு மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன. இத் வேலைத்திட்டமானது அவரது குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.