
40 மீனவர்களுக்கான 45000 ரூபா பெறுமதியானமீன்பிடி வலைகள் மேசிடோ நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மண்டூர் புயலினால் பாதிக்கப்பட்ட 40 மீனவர்களுக்கான 45000 ரூபா பெறுமதியானமீன்பிடி வலைகளே இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.






குறித்த நிகழ்வு இன்றைய தினம் 06.10.2023 கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 18 லட்சம் ரூபா, செலவில் குறித்த நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், மெசிடோ நிறுவன பணிப்பாளர் யாட்சன் மற்றும் மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.