கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால ஆசிரியர் தின விழா இன்று (06.10.2023) காலை 9 மணிக்கு கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் ஆசிரிய மாணவர் தலைவர் திரு சு தனசீலன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கலாசாலையின் பழைய மாணவனும் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரும் இசை அமைப்பாளரும் ஆகிய ஜேம்ஸ் ஆன்ரன் லூர்ஜினோ அவர்களால் கலாசாலை தாயே என்ற இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதன் காணொளி வடிவத்தை பிரதம விருந்தினர் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை திறன் பலகையின் ஊடாக வெளியிட்டு வைத்தார்.
தொடர்ந்து இசை அமைப்பாளருக்கான கௌரவம் மற்றும் பிரதம விருந்தினருக்கான கௌரவம் என்பன இடம் பெற்றன.
இந்நிகழ்வில் ஆசிரிய மாணவர்கள் தமது அதிபர் மற்றும் விரிவுரையாளர்களை கலாசாலை ஆலயத்திலிருந்து மாலை சூட்டி பாண்ட் அணி வகுப்பு மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வந்ததுடன் நினைவுச் சின்னங்களையும் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றன.