சுதந்திர மனித உரிமைகள் அமைப்பின் வடக்கு மாகாண இணைப்பாளர் புண்ணியமூர்த்தி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று காலை வடமாகாண கூட்டம் இடம்பெற்றது.
விருந்தினர்கள் வரவேற்பைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் மதத் தலைவர்களின் ஆசியுரையுடன் கூட்டம் ஆரம்பமானது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான ஆலோசனைகளை வழங்கவும் அவர்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க ஆவண செய்வதற்குமான நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியிலுள்ள சுதந்திர மனித உரிமைகள் அமைப்பின் கிளை அலுவலகங்களில் முன்னெடுப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் கூட்டத்தில் கலந்துகெண்டவர்கள் எழுப்பிய சட்டம்சார் கேள்விகளுக்கான தெளிவுபடுத்தல்களை சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகநாதன் வழங்கியிருந்தார்.
நிகழ்வில் சுதந்திர மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கபில ரஞ்சன் பெர்ணாண்டோ, யாழ் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்ன, ஊடகவியலாளர் மாலினி அஜந்தன், சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகநாதன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்ததுடன் மதத்தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், சுதந்திர மனித உரிமை அமைப்பின் மாவட்ட கிளை அலுவலக உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.