
தவறான முடிவெடுத்த இளைஞன் ஒருவன் மரணமடைந்த சம்பவம் ஒன்று வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் பதிவாகியிள்ளது.
கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வயலுக்கு பயன்படுத்தப்படும் நஞ்சு மருந்தை அருந்திய நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம் உயிரிழந்துள்ளான்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.