
இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.





சென்னையைச் சேர்ந்த பரத் மோகன் நிர்மலா தேவி தம்பதியின் மகன் ஹரேஷ் பரத் மோகன். இவர் ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி. இவரது பெற்றோர் இவரை நீச்சல் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சிறு வயது முதல் நீச்சல் பயிற்சியை முறையாக கற்றுக் கொடுக்கத் தொடங்கினர்.
இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என இலங்கையிலுள்ள தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணை கடலை நீந்தி சாதனை புரிவதற்காக ஹரேஷ் பரத் மோகன் ராமேஸ்வரம் அடுத்துள்ள சங்குமால் துறைமுகத்தில் இருந்து வெள்ளிகிழமை காலை தனது பயிற்சியாளர்கள் மற்றும் மீனவர்கள் என 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றார்.
தலைமன்னாரில் வெள்ளிகிழமை இரவு 11.37 மணியளவில் கடலில் குதித்து நீந்த தொடங்கி சனிக்கிமை பிற்பகல் 11.29 மணி அளவில் 11 மணி நேரம் 52 நிமிடம் ஹரேஷ் பரத் மோகன் நீந்தி தனுஷ்கோடி அரிச்சல் முனையை வந்தடைந்தார்.
அரிச்சல்முனை வந்தடைந்த ஹரேஷ் பரத் மோகளை அவரது தாய் கண்ணீர் மல்க முத்தமிட்டு வரவேற்றார். அதனை தொடர்ந்து சுங்கதுறை கண்காணிப்பாளர் சம்பத், மரைன் இன்ஸ்பெக்டர் கனகராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.