
பெரகலை ஊடான ஹப்புத்தளை – வெல்லவாய வீதி வியாரகல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால், அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மண்மேட்டை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.