
நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி கோரி, முல்லைத்தீவில் இன்று இளைஞர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கறுப்பு துணியால் வாயைக் கட்டி அமைதியாக கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ந்து நீதி அமைச்சின் செயலாளருக்கான மகஜர், முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிம் கையளிக்கப்பட்டது.
இன்று காலை 10.15 அளவில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மதகுருமார், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இ.ஜெகதீஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.