
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு வெள்ளை நிற காரில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே காயமடைந்துள்ளார்.
வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.