சீன கப்பல் நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சீன கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் கப்பல் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வரமுடியாது.
சீன கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கை வரமுடியும் என்பது குறித்து அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சீனாவுடனான இருதரப்பு உறவுகள் மிகவும் அவசியமானவை எனவும் அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.