
முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் 36 ஆவது நினைவு தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.




தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு தர்மபுரம் பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாஸ் நிர்மலநாதன், முன்னாள் வடமாகான கல்வி அமச்சர் குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.