
வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் 10 பேர் சிறைச்சாலையின் கூரையின் மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைதண்டனையை குறைக்குமாறு கோரியே கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.