
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது

1987 ஆம் ஆண்டு இதே மாதம் பதினோராம் பன்னிரண்டாம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை கொடூரமாக இந்திய இராணுவம் கொலை செய்தது.




அந்நாளின் 36 வது நினைவு தினம் நல்லூர் பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவுகளால் நினைவு கூறப்பட்டது.
இதன்போது வீதியயோரமாக அமைந்துள்ள நினைவு தூவியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் மு.தமிழ்மணி அவர்களால் படுகொலை தொடர்பான நினைவு உரை ஆற்றப்பட்டது.