
மன்னார் பள்ளிமுனை கடற்கரையிலிருந்து அட்டை பிடிக்க கடலுக்குச் செல்லும் பள்ளிமுனை கிராம மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதோடு, கடற்படையினர் இடையூறு ஏற்படுத்துவதாகவும் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளிமுனை கடற்கரையிலிருந்து கடலட்டை பிடிக்க தொழிலுக்குச் செல்ல முற்பட்டபோது, படகு ஒன்றில் 3 பேர் மாத்திரமே செல்ல முடியும் என கடற்படை அறிவித்தமையால் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு, மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன், உரிய தீர்வு கிடைக்காதவிடத்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் பள்ளிமுனை மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.